இன்று (ஏப்ரல் 17) ஸ்ரீராம நவமி தினத்தை முன்னிட்டு தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்;
ஒழுக்கம் மற்றும் கருணையின் உருவான ஸ்ரீராமபிரான் அவதார தினமான ஸ்ரீராம நவமி, நாடெங்கும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த இந்த நன்னாளில், அனைவருக்கும் ஸ்ரீராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றி கிடைக்கவும், அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.