ஊழல் கட்சியான ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தற்காக டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை கடந்த மாதம் 28 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய அர்விந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே முன்னிலையில் இன்று (மே 04) பாஜகவில் இணைந்தார்
அப்போது காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்.