ஏழை, எளிய மக்களிடம் அதிகாரத்தை காட்டி மிரட்டும் திமுக: தலைவர் அண்ணாமலை கண்டனம்!

மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது என தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் காலம், காலமாக பூர்வக்குடிகள் வசித்து வருகின்றனர். அவர்களை திமுக அரசு காவல்துறையை வைத்து நேற்று (மே 10) வலுக்கட்டாயமாக விரட்டியடித்தது. காவல்துறையின் அராஜகத்தை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய செய்தது.

இந்த நிலையில், பூர்வக்குடிகளை விரட்டியடித்தது தொடர்பாக தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் காணொளியை பதிவிட்டு கூறியிருப்பதாவது;

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒகேனக்கல் வனப்பகுதி பூர்வகுடி மக்களை, தமிழக வனத்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செய்தியும் காணொளிகளும், மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பூர்வகுடி மக்களின் உடைமைகளைத் தூக்கி எறிந்தும், கூரையைப் பிரித்து எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல், பலவந்தமாக வெளியேற்றியிருக்கின்றனர்.

மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத திமுக அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி வருகிறது.

வனப்பகுதி, பூர்வகுடி மக்களுக்கானது. அவர்களுக்கு முறையான வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து அகற்றும் திமுக அரசின் இந்த அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top