தமிழ்நாட்டைச் சேர்ந்த எனக்கு ராமர் என்றால் யார் என்றே தெரியாது என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கடந்த ஏப்ரல் 2022ல் கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால், தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்; நாங்க எல்லோரும் ராமர் பக்தர்கள்தான் நாங்கள் எப்படி ராமர் கோவிலை இடிப்போம். நாங்கள் நாமமும் போட்டு, பட்டையும் போடுவோம் என மே 19ல் கூறியுள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி ஏன் பகவான் ராமருக்கு கோவில் கட்டாமல் கூடாரத்திலேயே வைத்திருந்தது என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள். ஓட்டு அரசியலுக்காக ராமர் கோவில் கட்டுவதை தடுத்து வந்தது காங்கிரஸ் என்பதை யாரும் மறந்துவிடமாட்டார்கள். தற்போது அரசியல் ஆதாயத்துக்காக ராமர் கோவில் குறித்து காங்கிரஸ் கட்சியினர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.