கோவை வளர்ச்சிக்கு திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தடையாக இருக்கிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக தலைவர் அண்ணாமலை களம் இறங்குகிறார். அதன்படி இன்று (மார்ச் 27) கோவையில் உள்ள பிரசித்திபெற்ற கோனியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலை ,தொண்டர்கள் புடைசூழ ஆரவாரத்துடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் அண்ணாமலை:
கோவை மக்களின் அன்போடு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கோவை மக்கள் அனைவரும் என் மீது அன்பைப் பொழிகிறார்கள். கோவையில் ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகளுடன் தான் பாரதிய ஜனதா கட்சி போட்டி. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டசபையில் 3 முறை பேசியுள்ளார்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 87 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், கோவை நகர் வளர்ச்சி அடையக்கூடாது என திமுக அரசு கங்கணம் கட்டி வருகிறது. கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,யும் தடைக்கல்லாக இருந்தனர்
தொழில்துறையினரின் கோரிக்கையை கோவை எம்.பி., பேசியிருக்கிறாரா? கோவை காவல் தெய்வம் கோனியம்மனை வணங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்தேன். கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை, கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன். தொகுதி மக்களின் பிரச்சனைகளை நிச்சயம் தீர்ப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
கரூரில் இருந்து கல்லூரி படிக்க வந்தபோது, கோவை தான் என்னைப் பக்குவப்படுத்தியது. இங்குள்ள 60 சதவீத மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் என்.ஐ.ஏ. காவல் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக நிச்சயம் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராவார்.
எங்களுடைய போட்டி, வேட்பாளர்களுடன் கிடையாது, தமிழக வளர்ச்சியை தடுப்பவர்களுடன் மட்டுமே. அனைத்து மக்களின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது. கோவை குண்டுவெடிப்பில் இந்து, கிறிஸ்டின், உள்ளிட்ட எந்த மதத்தையும் பார்க்கவில்லை அனைவரும் உயிரிழந்தனர். எனவே ,தீவிரவாதத்தை எந்த விதத்திலும் எதிர்க்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.