தாமரையின் மலர்ச்சியே, நீலகிரியின் வளர்ச்சி என்ற முழக்கத்துடன் பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து திமுக, அதிமுக வேட்பாளர்கள் உள்ளனர். ஆனால் எதிரணியை விட அதிகமான பலம் வாய்ந்த வேட்பாளராக எல்.முருகன் களத்தில் உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க ஆர்வமுடன் உள்ளனர். அதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு எல்.முருகன் செல்லும்போது பொதுமக்கள், தொண்டர்கள் என அனைவரும் உற்சாகமுடன் வரவேற்பு அளிக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 27) நடைபெற்ற கூட்டணி கட்சி கூட்டம் தொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
நேற்று நீலகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க, அ.ம.மு.க, த.மா.க, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, த.ம.மு.க, ஐ.ஜே.க, புதிய நீதிகட்சி, இ.ம.க.மு.க ஆகிய கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன், பா.ஜ.க-வினரின் ஊழியர் கூட்டம் மேட்டுப்பாளையம் டிகேவி ஹாலில் நடைப்பெற்றது.
இதில் திரளாக கலந்து கொண்ட நம் தாமரை சொந்தங்கள், கூட்டணி கட்சி நண்பர்கள் மத்தியில் நடைப்பெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், “இந்த தேர்தல் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி- க்கான தேர்தல்’’ சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கடந்த பத்து ஆண்டு கால நல்லாட்சியில் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையத்திற்கான ரயில் சேவை வசதியினை மேம்படுத்தியுள்ளோம். இனியும் அடுத்து அமையகூடிய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி ஆட்சியில் இந்த சேவை தொடரும் ” என்பதை எடுத்துரைத்தோம்.
ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி பொறுப்பிற்கு வந்தவர்களுக்கு, தக்க பாடம் புகட்டும் காலம் நெருங்கிவிட்டது.
மோடியின் குடும்பமாக செயல்பட்டு, பாரதம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
“தாமரையின் மலர்ச்சியே..!
நீலகிரியின் வளர்ச்சி..!
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.