தஞ்சையில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி நேற்று (ஏப்ரல் 05) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதை பார்த்து அங்குள்ள மக்களே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டது. எங்கு பார்த்தாலும், போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லாம் போதை மாத்திரை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய திமுக அரசு போதைப்பொருள் கடத்தும் கும்பல் தலைவனுக்கு கட்சிப்பதவி கொடுத்து அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு வந்தது.
இந்த நிலையில், திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலுக்காக மக்களை சந்திக்க சென்றால் விரட்டி அடித்து வருகின்றனர். ஏதாவது சாதனை செய்திருந்தால் அதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கலாம். ஆனால் திமுகவினர் ஊழல் மட்டுமே செய்துள்ளனர். இதனால் மக்களை சந்திக்க முடியாமல் எதிர்கட்சிகளின் தலைவர்களை தரக்குறைவாக விமர்சிக்க தொடங்கியுள்ளது திமுக தலைமை.
மக்களிடம் செய்த நலத்திட்டங்களை எடுத்து சொல்ல தைரியம் இல்லாமல் உதயநிதி மற்றும் திமுகவினர், பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே நேற்று தஞ்சையில் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசும்போது, அனிதா 1200க்கு 1,720 மார்க் எடுத்தார். அவருக்கு மருத்துவ சீட் கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு காரணம் நீட் என்ற பொய்யை பரப்பினார். இதனை கேட்ட மக்கள் சிரிக்கத்தொடங்கினர்.
முன்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 1200 மார்க் மட்டுமே இருக்கும். ஆனால் உதயநிதி 1200க்கு 1,720 மார்க் என்று சொல்கிறாரே என்று ஆச்சரியமாக பார்க்கத்தொடங்கினர். இதற்காக உதயநிதியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். எத்தனை மார்க்கு என்றே தெரியாமல் இப்படி ஒரு தத்தி நமக்கு அமைச்சரா இருக்கிறாரே என புலம்பி வருகின்றனர்.