கொரோனா சமயத்தில் முன்களப் பணியாளர்களை உற்சாகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி விளக்கேற்றி, கைத்தட்டி ஒலி எழுப்ப கூறினார். இதனை திமுக அமைச்சர் உதயநிதி பொதுமக்கள் மத்தியில் திரித்து கூறிவருவதற்கு, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில்;
‘‘ஆறு மாசம் வீட்டில இருங்க, கடைகளை இழுத்து மூடுங்க, வெளில வந்தா கைதுனு சொன்னாரு, எல்லாரும் கைல விளக்கு பிடிச்சிக்குங்க, ஒரு கைல விளக்கு பிடிங்க, ஒரு கைல மணியடிங்க, சத்தம் போடுங்கனு மோடி சொன்னாரா இல்லையா?’’:- உதயநிதி ஸ்டாலின்.
ஒரு கைல விளக்கு பிடித்து, ஒரு கைல மணியாட்டுபவர்கள், பிரதமர் விளக்கேற்ற சொன்னதை, விளக்கு பிடிக்கச் சொன்னதாக புரிந்து கொள்வதிலும், கை தட்டி ஒலி எழுப்பி முன்களப்பணியாளர்களை பாராட்டச் சொன்னதை, ஒரு கைல மணி அடிக்க சொன்னதாக சொல்லி மகிழ்வதிலும் வியப்பில்லை.
‘முத்துவேல் கருணாநிதியின் பேரன், என்று பெருமை பேசும் இந்த நபர் சைகைகளோடு, இரட்டை அர்த்தத்துடன் பேசும் ஆபாச வசனங்கள் முகத்தை மட்டுமல்ல, காதையும் கூச வைப்பது தான் ‘திராவிட மாடல்’.
ஆபாசமே உன் பெயர் திமுகவா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.