பண அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல் – வாக்களித்த பின் தலைவர்  அண்ணாமலை பேட்டி 

இது பண அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல் என கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை நேற்று (ஏப்ரல் 19) தனது வாக்கினைப் பதிவு செய்த பின் கூறினார் 

வாக்களித்த பின் செய்தியாளரிடம் பேசிய அவர்;

மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும்.
எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்து உள்ளேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் நீங்கள் எங்கு இருந்தாலும் நேற்று (ஏப்ரல் 19) மாலைக்குள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள்.

அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி உருவாகும். தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் ஒரு வாக்காளருக்கு கூட பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்.

பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இத்தேர்தல் இருக்கும்.
முழுமையாக இந்த தேர்தல் நேர்மையான அறம் சார்ந்த, வெளிப்படையான தேர்தலாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top