சாமானியக் குடும்பக் குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு: அண்ணாமலை பெருமிதம்!

சாமானியக் குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று (மே 05) நீட் தேர்வு நடைபெற்றது. இதில்பல லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். அதே போன்று தமிழகத்திலும் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகி வருகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;

நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாமானியக் குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு, தமிழக மாணவர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது, ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது.

தமிழகத்தில், மருத்துவக் கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்த்தியுள்ள பிரதமர் மோடி வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.

வருங்காலத்தில் நீட் தேர்வு மூலம், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவர்களாக உருவெடுப்பார்கள் என்பது உறுதி.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top