தமிழகத்தில் இன்று (மே 10) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ் மொழிப்பாடத்தில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20,691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி நீங்கள் ஒரு அடி முன்வைத்துள்ளீர்கள். தொடர்ந்து முன்னேறி உங்கள் பெற்றோரையும், ஆசிரியர்களையும், நாட்டையும் பெருமைப்படுத்த எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிலர், தேர்ச்சி பெறத் தவறியிருந்தாலும், உங்கள் அடுத்த முயற்சியிலும், வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.