வாக்குப்பதிவு விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்குப்பதிவு முடிந்து ஓரிரு தினங்களில் வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தேகம் இருப்பதாக கூறினார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில், பொதுவாக தேர்தல் நடைபெற்று 24 மணி நேரத்தில் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படுவது வழக்கம். தற்போதைய தேர்தலில் மிக தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தலின்போதே வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுமாறு கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்துவதை பாதிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எப்படியும் இந்த முறையும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்க உள்ளது. முந்தைய தோல்விகளுக்கு எல்லாம் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழிசுமத்தினர். தற்போது புதிதாக தேர்தல் ஆணையத்தின் மீது பழிசுமத்துகின்றனர். ஜூன் 4ம் தேதி தோல்வியை அறிந்த உடனே பழியை தூக்கி தேர்தல் ஆணையத்தின் மீது போடவே எதிர்க்கட்சிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் நிதர்ஷனமான உண்மை.