திராவிட மாடலின் சாதனை; போடப்பட்ட ஒரே மாதத்தில் மாயமான தார் சாலை!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மத்துப்பட்டி ஊராட்சி ஆடலூர் செல்லும் சாலையில் சாத்தாரப்பன் கோவில் உள்ளது. இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு உள்ளவர்கள் விவசாயத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களை தினமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் காய்கறி சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. சாலை பணி நடக்கும் போது இப்பகுதி விவசாயிகள் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தினர். ஆனால் எதையும் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் தரமற்ற சாலையை அமைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே தற்போது பெய்த கன மழையில் ஒரே நாளில் சாலையில் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. அதேபோல் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமும் ஆங்காங்கே உடைந்து உள்ளது. தொடர்ந்து கன மழை பெய்தால் இப்பகுதியில் அதிக தண்ணீர் வரும் அப்போது பாலமும் அடித்துச் செல்லப்படும் மக்களின் வரிப்பணத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்படும் தார் சாலை ஒரே மழையில் அடித்துச் செல்லப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்டத்தில் உள்ள ஒப்பந்ததாரர்கள் வரையில் மக்களின் வரிப்பணத்தை ஊழல் செய்வதை பார்க்க முடிகிறது. இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் கண்டும் காணாத மாதிரியே உள்ளார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top