ஈரோடு சட்டமன்ற இடைதேர்தலில் திமுகவின் வெற்றி பணநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.’ஜனநாயகத்தின் தீர்ப்பு இது இல்லை’ என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது: “ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. தி.மு.க அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் வாக்கு அளித்துள்ளனர் என்பதை ஏற்க மாட்டோம். 2024 தேர்தலே பாஜகவுக்கான தேர்தல். இடைத்தேர்தல் பாஜகவுக்கானது அல்ல. பிரதமர் மோடியை ஏற்பவர்களோடு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமையும்” என்றார் .
தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி; ‘ஈரோடு இடைத்தேர்தல் வெட்கப்பட வேண்டிய வெற்றி. ‘இப்படி அதிமுக, பாஜக என பல்வேறு கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் ஒருமித்த குரலில், ஜனநாயகம், தேர்தல் விதிமுறைகள் எல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டன, இது பணத்தால் விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என கூறி வருகையில், இந்த வெற்றி முதல்வரைச் சேரும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்’ என மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., இடைக்காலப் பொதுச் செயலர் பழனிசாமி : ” ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடந்திருந்தால், அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்றிருக்கும். திமுகவினர் பணநாயகத்தின் வழியே, காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது, திமுகவுக்கு அழகல்ல. ஓட்டுப்பதிவு அன்றும் முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டன. அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி, அற்ப வெற்றியை, திமுக வசப்படுத்தி உள்ளது. திமுக வெற்றி, ஜனநாயகத்தின் தோல்வி; அரசியல் அறத்தின் தோல்வி
இடைத்தேர்தல், ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை. பணநாயகத்தின் அடிப்படையில் தான் தேர்தல் நடந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். ‘பணம் பாதாளம் வரை பாயும்’ ஆளும் கூட்டணி தேர்தலில் அதை தவறாக செயல்படுத்தியது துரதிர்ஷ்டவருமானது. என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் எதிர்பார்த்ததை போலவே தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பணநாயகத்தின் துணையோடு வெற்றி பெற்றது. ஜனநாயகத்திற்கு பதிலாக, பணநாயகம் வெற்றி பெற்று விட்டது” என்று கூறினார்.
ஈரோடு பிரச்சாரத்தின் போது சின்னவர் உதயநிதி 1லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் ஈரோடு கிழக்கிற்கு வருவேன் என பேசியிருந்தார். இந்த சூழலில் அவர் வருகையை ஈரோடு மக்கள் நிராகரித்து உள்ளது திமுகவின் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்ததோடு இல்லாமல், வெள்ளி கொலுசு, விளக்கு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், தங்க காசு, நாள் ஒன்றிற்கு மனிதபட்டியில் ரூ.500, மூன்று வேளை உணவு என பல கோடி ரூபாய் செலவு செய்த கணக்கு வழக்குகளை கவனித்த களைப்பில் உதயநிதி சிங்கப்பூர்க்கு சுற்றுலா சென்று விட்டு இந்தியா திரும்புகிறார். இந்த சூழலில் திருமங்கலம் பார்முலாவை, தோற்கடித்த, ஈரோடு பார்முலா, பணநாயகத்தின் வெற்றி என பொதுமக்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.