ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பற்றிய தனியார் செய்தி சேனல் வெளியிட்ட வீடியோ ஒன்றை பாஜகவின் நாமக்கல் மாவட்ட சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததற்காக அவரை திமுக அரசு கைது செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் பிரவீன் ராஜ். இவர் பாஜக இளைஞரணி ஊடகப் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை உடனுக்குடன் (சங்கி பிரின்ஸ்) என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
இவர் சமீபத்தில் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பற்றிய ஆங்கில சேனல் வெளியிட்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக திமுக தூண்டுதலின் பேரில் கரூர் காங்கிரஸ் கட்சியினர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தனர்.
அதற்காக பிரவீன் ராஜ் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் சென்ற போலீசார் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள கதவை உடைக்க முற்பட்டுள்ளனர். ஒரு கட்டத்திற்கு பின்னர் அக்கம் பக்கத்தினர் கேள்வி கேட்டதால் நாங்கள் போலீஸ் என்று மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் பிரவீன் ராஜை கைது சென்று அழைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தனது கைது நடவடிக்கைக்கு முன்னர் பிரவீன் ராஜ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; ” அதிகாலை இரண்டு மணிக்கு கதவை தட்டி, பிறகு கதவை உடைக்க முற்படும் சிலர். கேட்டால் சைபர் க்ரைம். ஆனால் தான் காமிக்கும் ஐடி கார்டை உள்ளூர் மக்கள் போட்டோ எடுப்பது குற்றம் என சொல்லி மிரட்டல். புரோட்டாகால் படி போலீசும் உடன் இல்லை. வீழ்வேன் என நினைத்தாயோ ஸ்டாலின்? ” எனப் பதிவிட்டுள்ளார்.
திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர்களையும் மிகவும் தரக்குறைவான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீது இந்த அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனால் பாஜகவினரை மட்டும் வேண்டும் என்றே திட்டமிட்டு கைது செய்து வருவது தொடர்கதையாக உள்ளது. திமுகவினரின் சமூக வலைத்தள பதிவுக்கு கைது செய்ய தொடங்கினால் அவர்களை சிறையில் வைப்பதற்கான இடம் இல்லாமல் போகும். அந்த அளவுக்கு வெளியில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றனர் என்பதை இந்த ஆட்சியாளர்கள் அறிய வேண்டும். மக்கள் விரோத திமுக அரசுக்கு விரைவில் தேர்தல் மூலம் மக்கள் முடிவு கட்டுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.