ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளாகி கீழே விழுந்த நிலையிலும், தன் கையில் இருந்த தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே இருந்தவர் திருப்பூர் குமரன் எனப் அவரது பிறந்த நாளில், மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில்; சுதந்திரப் போராட்ட வீரர் அமரர் திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று.
இளம் வயதிலேயே காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு, நாட்டு விடுதலைக்கான போராட்டங்களில் கலந்து கொண்டவர். 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மறுப்பு அறப்போராட்டத்தில், ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளாகி கீழே விழுந்த நிலையிலும், தன் கையில் இருந்த தேசியக் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார். இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்த போது, அவரது வயது 27. அமரர் கொடிகாத்த குமரன் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக புகழஞ்சலி செலுத்தி வணங்குகிறோம். தன்னலமற்ற எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் பெற்ற நம் சுதந்திரத்தைப் பேணிக் காப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.