பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதே போன்று நேற்று சூலூர் தொகுதியில் நடைப்பயணம் முடிந்த பின் நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு உணவருந்தியுள்ளார் அண்ணாமலை. இது பற்றிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக பாஜக தேசிய பொதுசெயலாளர் பி.எல்.சந்தோஷ் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உன்னத நோக்கத்திற்காக தினந்தோறும் உழைக்கும் அர்ப்பணிப்புள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வியர்வை சிந்தும் கடின உழைப்பால் கட்டமைக்கப்பட்டுள்ள கட்சி பாஜக.
இதை நிரூபிக்கும் வகையில் தமிழ்நாட்டில் என் மண் என் மக்கள் நடைபயணத்திற்கு பிறகு இரவு நேரத்தில் சாலையோரம், மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் உணவருந்தினர் என்று குறிப்பிட்டு அதன் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.