அரசு பள்ளி மாணவர்களை வகுப்பு நடைபெறும் சமயத்தில் வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்று, ‘நீட்’ எதிர்ப்புக்காக கையெழுத்து இயக்கம் நடத்திய திமுகவினர் மீது பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் பொய் வாக்குறுதி கொடுத்து, நீட் ஒரு அரக்கன் போல் என்று சித்தரித்து, அப்பாவி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். முடியாத விஷயத்தை சொல்லி விட்டு, தற்போது மக்களை திசை திருப்ப, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் 50 லட்சம் கையெழுத்து போட வேண்டும் என உதயநிதி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
அதற்காக தமிழகத்தில் பல்வேறு அரசுப்பள்ளிகளில் திமுகவினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கையெழுத்து வாங்கி வருகின்றனர் திமுகவினர். த்தின் அதே போன்றுதான் சென்னை, செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் திமுக இளைஞர் அணி சார்பில், ‘நீட்டை ஒழிப்போம் மாணவர்களை காப்போம்’ என்ற தலைப்பில் நேற்று (நவம்பர் 2) காலை கையெழுத்து இயக்கம் நடந்தது.
மாதவரம் தொகுதி திமுக- எம்.எல்.ஏ., சுதர்சனம் மற்றும் கட்சியினர் சேர்ந்து கொண்டு பாடியநல்லூரில் உள்ள அரசு பள்ளி படிக்கும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களை மொண்டியம்மன் நகர் மார்க்கெட் பகுதிக்கு அழைத்துச் சென்று நீட் எதிர்ப்புக்காக கையெழுத்து பெற்றனர்.
சீருடையில் வந்த மாணவர்கள் சுதர்சனம் எம்.எல்.ஏ., பேசி முடிக்கும் வரை சுமார் ஒரு மணி நேரம் வெயிலில் காத்திருந்து, கையெழுத்திட்டுச் சென்றனர். இதைக்கண்ட சில மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திமுகவினர் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பள்ளி ஆசிரியர்கள் எப்படி அனுமதி அளித்தனர் என்றும் கேள்வி எழுப்பினர். தமிழக பள்ளிக் கல்வித்துறை இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆவேசப்பட்டனர்.
சென்னை விருகம்பாக்கம் எம்எல்ஏ வும், வணிகர் சங்க பேரவையின் தலைவர் விக்ரமா ராஜாவின் மகன் பிரபாகரன், விருகம்பாக்கம் அரசு பள்ளி ஒன்றில் புகுந்து மாணவர்களிடம் நீட் எதிர்ப்பு கட்டாய கையெழுத்து வாங்கிய காணொளி வைரல் ஆகிய நிலையில், யாரும் எங்களை தடுக்க முடியாது என்ற அதே அராஜகத்தை மற்ற எம்எல்ஏக்களும் செய்து வருவது, அதிகார அத்துமீறல் என்கிறார்கள் பொதுமக்கள். பொதுமக்கள் நீட் எதிர்ப்பு மன நிலையில் இருந்து விலகி வந்து விட்டதால், திமுக அரசு மாணவர்களை குறி வைக்கிறது என குற்றம் சாட்டுகிறார்கள் பெற்றோர்கள். இதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை என்கிறார்கள்!