இலங்கையில் நடைபெற்ற ‘நாம் 200’ நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை!

இலங்கையில் மலையகத் தமிழர்களை கெளரவப் படுத்தும்  வகையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் 1823ஆம் ஆண்டே தமிழர்கள் இலங்கைக்கு சென்றதன் நினைவை போற்றும் வகையில் ‘‘நாம் 200- ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்’’ என்ற நிகழ்ச்சி கொழும்பில் நேற்று (நவம்பர் 2) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் எனது மாலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ‘நாம் 200 என்பது’ நம் அனைவரையும் ஒரே நேரத்திலேயே குறிக்கிறது. 200 மிக கடுமையான ஆண்டுகளை கடந்து வந்து 2023ம் ஆண்டில் அமர்ந்திருக்கிறோம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தி காட்டுகிறது.

1823ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து குறிப்பாக தென்தமிழகத்தில் இருந்து உங்களின் முன்னோர்கள் இலங்கைக்கு வந்தார்கள். குறிப்பாக பஞ்சத்தில், பசியில், வறுமையில் நமது சகோதர, சகோதரிகள் கப்பல் மூலமாக இலங்கை நாட்டின் மலையக பகுதிக்கு வந்து, மிருகங்களால் சூழப்பட்ட காட்டினை, வெறும் கைகளினால் கடுமையான உழைப்பினால் மிக அழகான நாடாக உயர்த்தியுள்ளீர்கள்.

இந்த நாடு உயர்வதற்கு முக்கிய காரணம் தமிழர்களின் உழைப்புதான். தமிழர்களுக்கும், இலங்கையில் உள்ள மலையக தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவுகள் என்று நாம் சொல்ல வேண்டும்.

இதுவரை எந்த பிரதமரும் செய்யாத ஒன்றை கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி செய்தார். தனது இலங்கை பயணத்தின் போது மலையகத் தமிழர்களை  அவர்கள் வாழும் பகுதிகளுக்கே சென்று அவர் சந்தித்தார். இதனால் மலையகத் தமிழர்களை பொறுத்தவரை பிரதமர் மோடியை தங்களுக்கு மிகவும் நெருக்கமாக வைத்து பார்க்கிறார்கள்,  எனத்  தெரிவித்தார்.

அடுத்தடுத்து தமிழர் வாழும் வெளிநாடுகளுக்கு செல்வது, அவர்களை சந்திப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை, இலங்கைக்கு மீண்டும் மீண்டும் சென்று வருவது திராவிட கட்சிகளுக்கு எரிச்சலை ஊட்டி உள்ளது. அவர்களின் இலங்கை தமிழர் பொய்கள், இனி தமிழகத்தில் விற்பனையாகாது, என்ற கோபம் அவர்களின் செயல்களில் வெளிப்படுகிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top