வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் கறி உண்பவர்களாக மாற்றுவது தான் இ.ண்.டி. கூட்டணியின் சமூக நீதியா ? எனக் கேள்வி எழுப்பி உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவின் ஆர்.எஸ்.பாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஶ்ரீரங்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை மாற்ற திமுகவினர் முயற்சி செய்கிறார்கள். ஊடக நண்பர்கள் முன்னாள் நான் தெளிவாகக் கூறுகிறேன். ஆர்.எஸ்.பாரதி பேசியது, நாகலாந்துகாரன் நாய்கறி சாப்பிடும் அவங்களுக்கே அவ்வளவு ரோசம் இருந்தால் நாம உப்புபோட்டு சாப்பிடுகிறோம் நமக்கு எவ்வளவு ரோசம் இருக்கும், என்பது தான். இதை நல்ல தெளிவாக பேசியுள்ளார். இதைவிட ஒரு சமுதாயத்தை மிக மோசமாக யாரும் பேச முடியாது. நாகலாந்தில் இருப்பவன் நாய்கறி சாப்பிடறவனுக்கே ரோசம் இருந்தா நமக்கு உப்பு போடறவங்க.. அப்படி என்றால் நாகலாந்து மக்கள் கண்ணியம் இல்லாதவர்கள்.. தரம் குறைந்தவர்கள் அப்படி என்று ஆர்.எஸ்.பாரதி வெட்ட வெளிச்சமாக பேசியுள்ளார்.
இதுக்கு எல்லாம் திமுக அரசு வழக்கு போடவே மாட்டார்கள். ஆர்.எஸ்.பாரதியை புடிச்சு உள்ளே போட மாட்டார்கள். கடந்த 30 மாதங்களாக ஆர்.எஸ்.பாரதியின் பேச்சைப் போல சாலையில் செல்லும் பொறுக்கிகூட பேச மாட்டார்கள். 20 குற்றங்கள் செய்த குற்றவாளிகள் கூட ஆர்.எஸ்.பாரதி மாதிரி பேச மாட்டார்கள். திமுகவின் சொத்தே ஆபாச பேச்சுதான். திமுகவிலேயே போட்டி இருக்கு.. யார் ஆபாசமாக பேசுவார்கள் என்று. அதில் தற்போது பாரதி தங்கமெடல் வாங்கி வருகிறார். ஆர்.எஸ்.பாரதி மாதம், மாதம் தரக்குறைவாக பேசுகிறார். எனவே இப்படியே பேசுவது கண்டனத்துக்குரியது. உடனடியாக ஆர்.எஸ்.பாரதியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.