சென்னை மழையால் மிதப்பதற்கு தி.மு.க., அ.தி.மு.க.வே காரணம்: பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

சென்னை மாநகரம் மழையால் மிதப்பதற்கு திமுக மற்றும் அதிமுகவே காரணம் என பாஜக பிரச்சாரப்பிரிவு மாநில தலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,

துணைநகரங்களை உருவாக்கும் அரசு துணைஏரிகளை ஏன் உருவாக்கவில்லை?

மழை வந்துவிட்டால் பூகம்பம் வந்துவிட்டதைப்போல தலைசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கிறது திமுக நிர்வாகம்!

உண்மையில் சிறு மழையாலும்கூட அதிக பாதிப்பு தமிழக நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் ஏற்படுவதற்கு, 5 முறை ஆட்சியில் இருந்த திமுகவும், திமுக இல்லாத நேரங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுமே காரணம்!

குடியிருப்புகள் உருவாக்கப்படும் போதும், தெருக்கள் அமைக்கப்படும்போதும், கட்டிடங்களுக்கு அனுமதிகள் வழங்கப்படும்போதும், மழைநீர் வழிந்தோட உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை!

நீர்நிலைகளை நிரப்பி கட்டிடங்களை கட்டிக்கொள்ள இந்த அரசுகளால் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன!

ஒதுக்கப்படும் நிதியில் பாதியை கமிஷனாக பெற்றுக்கொண்டு மீதியை மட்டுமே சாலை அமைக்க செலவிடுவதால் சாலைகள் எல்லாம் ஓடைகளாக மாறிவிடுகின்றன!

இந்த ஆட்சியாளர்களே மழையின் அவதிக்கு காரணம்! இந்த உண்மை மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, ஆட்சியாளர்கள் மழை வந்தவுடன் சினிமா ஆக்சன்போல தொலைக்காட்சிகளில் சீன் காட்டுகிறார்கள்!

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அமைச்சர்கள் தன்ணீரில் நடப்பது போட்டோவுக்கு போஸ்கொடுப்பது பேட்டி கொடுப்பது, இதுதான் கடமை என்று ஆளும் தரப்பு கருதுகிறது!

கண்டிப்பாக மழைநீரை பக்கெட்டில் பிடித்து ஊற்ற ஆள்வைப்பார்கள், இந்த தெருவில் ஓடும் நீரை உறிந்து எடுத்து அடுத்த தெருவில் விடவும் அடுத்த தெருவில் ஓடும் நீரை அதற்கும் அடுத்த தெருவில் விடவும் ஏராளமான மோட்டார்களையும் வேலையாட்களையும் நியமிப்பார்கள்!

மண்ணோடு, கல்லோடு, தாரோடு லாரிகள் வரும், வந்து கொட்டி நிரவுவார்கள்! இதுவெல்லாம் மக்களுக்கு உதவுவதற்காக அல்ல! அதிலே கமிஷன் பார்ப்பதற்காக!

நீர்நிலைகளிலும் நீர்நிலைகளுக்கு அருகிலும் அடுக்குமாடி கட்டிடம் கட்டிக்கொள்ள மந்திரிகளின் பினாமி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி, துணை நகரங்களையும் உருவாக்கும் மாநில அரசுகள் ஏன் துணை ஏரிகளையும் துணை ஆறுகளையும் (கால்வாய்களையும்) இதுவரையில் உருவாக்கவில்லை?

துணை ஏரி இருந்தால் ஏரி உடைக்காது, ஏரியில் மழைநேரத்தில் அதிக நீர் திறக்கவேண்டிய அவசியம் வராது! தமிழக அரசுகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் அறிவுபூர்வமாக ஆட்சி நடத்தியிருந்தால், மேகம் கருத்தவுடன் பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கவேண்டிய அவலம் ஏற்படாது! நீர்நிலைகளில் அரசு அனுமதியுடன் கட்டிடங்களை கட்டிக்கொண்டு, மழைவந்ததும், ““அய்யோ” “அய்யோ” என தொலைக்காட்சிகளில் அலறுவது வேதனையாக இருக்கிறது!

சாலைகளுக்கு ஒதுக்கிய பணத்தையும், மழைநீர் வடிகால்வாய்க்கு ஒதுக்கிய பணத்தையும், சாக்கடை கால்வாய்க்கு ஒதுக்கிய பணத்தையும் சரியாக முழுமையாக செலவு செய்திருந்தால், மழைநீர் சாலையில் தேங்கியிருக்காது!

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியிருக்காது!

உண்மையில் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அரசினையும் ஆண்டவர்களையும் குற்றஞ்சாட்டியிருக்க வேண்டும்!

மக்கள் ஆளுகிறவர்களையும் ஆண்டவர்களையும் நிற்க்கவைத்து கேள்வி கேட்கவேண்டும்! ஆனால் இவர்களோ மழையை குற்றம் சொல்கிறார்கள்! ஆனால் நமது கருத்து, “மழை வாழ்க! மழை மீண்டும் வருக!”

திட்ட நிதியில் சுரண்டல் செய்து மக்களை தவிக்கவிடும் அரசியலார் ஒழிக! நேர்மையான அரசியல் தமிழகத்தை ஆழ்க!” என்பதாகும்! எனத் தெதரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top