மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய உங்களின் தொடர் முயற்சிகளுக்கும் ஆதரவிற்கும் பா.ஜ.க., சார்பாகவும் தமிழக மீனவர்கள் சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

டிசம்பர் 9ம் தேதி 2023 அன்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் IND-TN-06-MM-7675 என்ற பதிவு எண் கொண்ட மீன்பிடிப் படகும் பிடிபட்டதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவாக விடுதலை செய்யவும், மீன்பிடி படகை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்ககை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top