அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக வழங்கப்பட்டது.
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.எஸ்.எஸ்., சென்னை மாநகரத் தலைவர் ஸ்ரீ சந்திர சேகர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஸ்ரீ ஆண்டாள் சொக்கலிங்கம் ஆகியோர்கள் குடும்பத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். அப்போது அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் ஸ்ரீ ராமர் கோவில் படம் மற்றும் அட்சதையை ஆளுநரிடம் வழங்கினர்.