திண்டுக்கல் அருகே பா.ஜ.க., கிளைத் தலைவர் மீது தாக்குதல் நடத்திய திமுக குற்றவாளிகள் அமைச்சர் பெரியசாமியின் நேரடி பாதுகாப்பில் இருப்பதாக தமிழக பாஜக தொழில் பிரிவு துணைத்தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், கோனூர் ஊராட்சியில் பொங்கல் அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி திமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவர் வெள்ளைதாயிடம் கேள்வி கேட்டார் பாஜக கிளைத் தலைவர் கருப்பையா.
இதனால் கோபமடைந்த ஊராட்சி தலைவரின் கணவர் தங்கபாண்டியன், அவரது மகன் யுவராஜ், மருமகன் மகுடீஸ்வரன் ஆகிய முவரும் சேர்ந்து உடைந்த பீர் பாட்டிலை வைத்து கருப்பையாவின் கழுத்தில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்து உயிர் தப்பிய கருப்பையா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கு பதிவு செய்த காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. குற்றவாளிகள் அனைவரும் அமைச்சர் பெரியசாமியின் நேரடி பாதுகாப்பில் உள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.