தமிழக பிரபலங்களுக்கு பத்ம விருதுகள்: மத்திய அரசுக்கு தலைவர் அண்ணாமலை நன்றி!

பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஜோஷ்னா சின்னப்பா விளையாட்டு:

2014 இல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றார். இந்தியாவிற்கு மட்டுமின்றி தமிழகத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார். மேலும் பல்வேறு போட்டியில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். ஜோஷ்னா சின்னப்பாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஜோ டி குரூஸ் இலக்கியம்:

பல விருதுகளை பெற்ற கொற்கை, ‘ஆழி சூழ் உலகு’ ஆகிய நாவல்களை படைத்தவர். தமிழக மீனவ சமூதாய முன்னேற்றத்திற்காக பெரிதும் உழைத்தவர். இவருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஜி.நாச்சியார்:

அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனறும், மருத்துவத் துறையில் 40 ஆண்டுகால பங்களிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான கிராமப்புற பெண்களை கண் மருத்துவர்களாக்கியவர். இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறப்பு மிக்க விருதை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேஷம்பட்டி டி.சிவலிங்கம் கலை:

பழம்பெரும் நாதஸ்வரக் கலைஞர் திரு சேஷம்பட்டி டி.சிவலிங்கம் அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தள்ளது. இந்த விருது வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பத்மா சுப்ரமணியம்:

புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ஸ்ரீமதி பத்மா சுப்ரமணியம் அவர்களுக்கு பத்ம விருது வழங்குவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதாக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பத்ரப்பன், நாட்டுப்புற நடனக் கலைஞர்:

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமான வள்ளி கும்மியின் புகழ்பெற்ற நடனக் கலைஞரும் மாஸ்டருமான திரு. பத்ரப்பன் அவர்களுக்கு மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாஜக சார்பில் நன்றியை தெரிவிப்பதாக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top