மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு படையினர் (என்.ஐ.ஏ.,) அதிரடி சோதனை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட விடுதலைபுலி மற்றும் தேச விரோத சக்திகளுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த சர்ச்சையின் அடிப்படையில்
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் ஆஜராகுமாறு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 02) திருச்சி வயலூரில் சாட்டை முருகன், கோவை ஆலாந்துறை ஆர்ஜி நகரில் ரஞ்சித், காலப்பட்டி முருகன், தென்காசி சிவகிரி இசைமதிவாணன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியின் முருகன் விஷ்ணு, உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
சீமானுக்கு அடுத்து இரண்டாவது தலைவராக விளங்கி வரும் சாட்டை முருகன் சிக்கி இருப்பது நாம் தமிழர் கட்சியை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சோதனைக்கான முழுத்தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.