நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டியுள்ளார். அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆவணங்களைச் சம்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய். இது தொடர்பாக, கட்சியின் லெட்டர் ஹெட் உடன் அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டிட்டு வெற்றி பெற்று அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதே நமது இலக்கு எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
விஜய் தலைமையிலான அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் சென்றார். ஆவணங்களைச் சமர்ப்பித்து, அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் புஸ்ஸி ஆனந்த்.