எழுத்தாளர் த.சி.க. கண்ணன் திருஉருவப் படத்தை திறந்து வைத்த தலைவர் அண்ணாமலை!

சென்னையில் எழுத்தாளர் த.சி.க. கண்ணன் திருஉருவப் படத்தை தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 10) திறந்து வைத்தார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

இன்றைய தினம் சென்னையில், முத்தமிழ்க் காவலர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மருமகனும், மிகச்சிறந்த பன்மொழி எழுத்தாளருமான அமரர் திரு.த.சி.க. கண்ணன் அவர்களது திருஉருவப் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.

ஐயா திரு. த.சி.க. கண்ணன் அவர்கள், பல மொழிகளில் புலமை வாய்ந்தவர். சமஸ்கிருதம், ஹிந்தி முதலானவற்றில் பல புத்தகங்கள் எழுதியவர். மறைந்த பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்களுக்கு அறிமுகமானவர். அவரது திருஉருவப் படத்தைத் திறந்து வைக்கும் பெரும் வாய்ப்பை வழங்கியதற்கு, அம்மா திருமதி மணிமேகலை கண்ணன் அவர்களுக்கும், சகோதரர் திரு ஸ்ரீகாந்த் கருணேஷ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவிற்குத் தலைமையேற்று, முன்னிலை வகித்து சிறப்புரையாற்றிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர், திரு பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் தலைவர் திரு ஏ.சி.சண்முகம்,  நீதியரசர் திரு. டி.என். வள்ளிநாயகம், லைஃப் லைன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் திரு டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார், கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி தாளாளர் திரு. விகாஸ் ஆர்யா, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் மற்றும் விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தமிழகப் புலவர்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top