தருமபுரி நகராட்சியில் உள்ள பொதுமக்கள் குறைகளை கேட்க சென்றபோது திமுக சேர்மனின் கணவர் நாட்டான்மாது மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி நகராட்சியை திமுக கைப்பற்றிய பின்னர் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல், ஊழல் செய்வதிலேயே குறியாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று தங்கள் பகுதிக்கு எந்த ஒரு அடிப்படைத் தேவையும் நிறைவேற்றவில்லை என நகராட்சி அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டனர். அப்போது திமுக நகராட்சி தலைவியின் கணவரான நாட்டான் மாது தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமின்றி அவர்களை அடிக்கவும் கை ஓங்கினார். இது பற்றிய வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாக்களித்த மக்களுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் நிறைவேற்றாமல், அடிக்க பாய்ந்த திமுக நகராட்சி தலைவயின் கணவருக்கு கண்டனம் வலுத்து வருகிறது.