நாடாளுமன்றத் தேர்தல் வரஉள்ளதைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும், ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு ஒன்றை அமைக்க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அனுமதித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலத் தலைவர் திரு. K. அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஜி அவர்களின் அனுமதியுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும், ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
மாநில அளவிலான குழுவில் இடம் பெற்றவர்கள்:
1) டாக்டர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சர்
2) அரவிந்த் மேனன், தேசிய செயலாளர், தமிழக தேர்தல் பொறுப்பாளர்
3) டாக்டர் சுதாகர் ரெட்டி முன்னாள் எம்.எல்.சி., தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர்
4) நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., சட்டமன்ற குழு தலைவர் பா.ஜ.க.,
5) பொன்.இராதாகிருஷ்ணன் முன்னாள் எம்.பி., தேசிய செயற்குழு உறுப்பினர்
6) ஹெச்.ராஜா முன்னாள் எம்.எல்.ஏ., தேசிய செயற்குழு உறுப்பினர்
7) வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய தலைவர் மகளிர் அணி
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.