ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்த தம்பதி, நம் அண்டை நாடான வங்க தேசத்துக்கு சுற்றுலா வந்தனர். அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் நம் நாட்டில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வந்தனர்.
இங்குள்ள தும்காவிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்த இவர்கள், பீஹார் வழியாக நேபாளம் செல்ல திட்டமிட்டு இருந்தனர். இரவு நேரமானதால், தும்கா அடுத்த குருமஹத்தில் உள்ள பொது இடத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர்.
இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள், ஸ்பெயின் நாட்டு பெண்ணை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாலியல் பலாத்காரம் தொடர்பாக பெண்ணின் கணவர் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், உள்ளூர் இளைஞர்கள் மூன்று பேரை நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை அவர் கணவரின் முன்பே கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில், இது இந்தியாவுக்கே களங்கம் ஏற்படுத்தியிருக்கும் செயல், பிரதமர் நரேந்திர மோடியிடம் இதற்கு விடை இருக்கிறதா? என காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரின்ஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால், ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியில் இல்லை. இ.ண்.டி. கூட்டணியில் உள்ள ஜேஎம்எம் கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது என்று நெட்டிசன்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
எந்த மாநிலத்தில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவர்களாகத்தான் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர் என்பதற்கு இந்த பிரின்ஸ் எம்.எல்.ஏ.,வே ஒரு உதாரணமாக சொல்லலாம்.