400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பிரதமராக மோடி வருவார்: சேலத்தில் அண்ணாமலை சூளுரை!

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என சேலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் தமிழக பாஜக தலைவர் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், துணைத்தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சரத்குமார், குஷ்பு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களான டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், தமிழருவி மணியன், திருமாறன், ஜான்பாண்டியன், செல்வக்குமார், தேவநாத யாதவ் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

உலகத்தின் விஷ்வகுரு வெற்றி நாயகன் பிரதமர் நரேந்திர மோடி ஐயா சேலம் மாநகருக்கு வந்திருக்கிறார். நரேந்திர மோடி ஐயா சாதாரணமாக வரவில்லை. வரும்போதே தமிழ்நாட்டில் பலம் பொருந்திய எல்லாத்தலைவர்களையும் தன்னோடு அழைத்து வந்துள்ளார். மாற்றத்திற்கான வெற்றிக்கூட்டணியாக நமது கூட்டணி உள்ளது. தமிழகத்தின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களையும், புதுச்சேரியும் சேர்த்து நாற்பதுக்கும் நாற்பது பெறுவோம்.

இந்த முறை 400க்கும் மேல் ஜூன் 4ஆம் தேதிக்கு மேல் 400க்கும் மேல்.. என்று கர்ஜித்தார். அப்போது தொண்டர்கள் ஆரவாரத்துடன் 400க்கும் மேல் என்று முழங்கினர்.

மேலும் தலைவர் அண்ணாமலை பேசும்போது, 400க்கும் மேல் தொகுதிகளை பாஜக கூட்டணி பெறும். அப்போது இந்த ஏழைத்தாயின் மகன் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார்.  
400 என்பது சாதாரணமான வார்த்தை இல்லை. அது ஒரு மந்திரச்சொல். இந்த மந்திரச் சொல்லுக்காகத்தான் சமூகநீதி காவலர் ஐயா ராமதாஸ் அவர்கள் நம்முடன் கைகோர்த்து மேடையின் மீது நம்முடன் மூன்றாவது முறையாக 400க்கும் மேல் என்ற மந்திரச்சொல்லுடன் வந்திருக்கிறார்.

ஐயா அவர்களின் கனவு என்னவெல்லாம் இருக்கிறதோ அதை மோடி ஐயா நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மோடி ஐயாவிற்கு வலிமை சேர்ப்பதற்காக ராமதாஸ் ஐயா வந்துள்ளார். மேடையில் இருக்கும் ஒவ்வொரு தலைவரும் கூட மோடி ஐயாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என வந்துள்ளனர். மேலும் 400க்கும் மேல் நமது கூட்டணி வெற்றிபெற்று, இந்தியாவில் உள்ள வறுமையை ஒழிக்கும்.

400க்கும் மேல் வெற்றிபெற்று வரும்போது விவசாயிகளின் நலனுக்காக இந்த அரசு மறுபடியும் பாடுபடும். 400க்கும் மேல் வரும்பொழுதுதான் ஒரு ஏழைத்தாயின் வயிற்றிலே ஏழைக்குழந்தை பிறந்திருந்தால் கூட நம்முடைய தலைமுறையில் ஏழை என்ற வார்த்தை இருக்கக்கூடாது என்பதற்காக நாம் பாடுபட முடியும் சகோதர, சகோதரிகளே.. நாம் ஆட்சிக்கு வருவது உறுதி. ஒரு சின்னக்குழந்தையை கேட்டால் கூட ஒரு குழந்தையும் சொல்லும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தாத்தாத்தான் மீண்டும் பிரதமராக வருவார் என்று சொல்லும்.

தமிழகத்திலே நாம் 39 இடங்களையும் வென்று கொடுக்க வேண்டும் என்பதற்காக அற்புதமான தலைவர்கள் நம்முடன் வந்துள்ளனர். மோடி ஐயா நிறைய விஷயங்களை உங்களுடன் பேசப்போகிறார். அதற்கு முன்பாக ஒரே ஒரு வேண்டுகோளை உங்களிடம் வைக்கிறேன்.

மோடி ஐயா சொல்றாங்க.. என்னுடைய பெரிய வருத்தம் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை.. மனதின் குரல் நிகழ்ச்சிகளில் சொல்றாங்க.. தமிழ் மொழியை கற்றுக்கொண்டு என்னால் பேசமுடியவில்லையே என்று பிரதமர் கண்ணீர் சிந்துகின்றார். இன்றைக்கு மோடி ஐயாவை பற்றி தெரியும். மோடி என்றால் தொழில்நுட்பம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுடன் மோடி ஐயா தமிழிலேயே நம்மோடு பேச ஆரம்பித்துள்ளார்.

சகோதர, சகோதரிகளே நீங்கள் எல்லாம் பார்க்கின்றீர்கள். நீங்கள் செய்ய வேண்டியத ஒன்றே ஒன்றுதான். நமக்காக தமிழில் பேசும் மோடி ஐயாவின் பேச்சை எக்ஸ் வலைத்தளம், நமோ இன் தமிழ் மூலமாக காணலாம். அதை முதலில் நாம் பார்க்க வேண்டும். அதை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும். புதிய மனிதர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

என்னங்க, மோடி ஐயா மட்டும் தமிழில் பேசினால், தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் இருக்கும் என நினைக்கிறீர்களா? ஒருவர் கூட இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதனால் சகோதர, சகோதரிகளே, மோடி ஐயாவின் அன்பான வேண்டுகோள். எக்ஸ் வலைத்தளத்தில் நமோ இன் தமிழ் மூலமாக பின்தொடர வேண்டும். உங்களது நண்பர்களுக்கும் அதை காண்பிக்க வேண்டும்.

மேலும், உங்களது செல்போனை எடுத்து மோடி ஐயாவிற்கு காண்பிக்க வேண்டும். நிச்சயாக நாங்கள் கேட்க வைக்கிறோம். நிச்சயமாக தமிழில் மோடி ஐயா பேசுவதை நாங்கள் கேட்போம் என்று மோடி ஐயாவிற்கு செல்போனை காண்பியுங்கள். மோடி ஐயாவின் பேச்சை பட்டித்தொட்டி எங்கும் எடுத்துச்செல்வோம் என்று சொல்வோம். அனைவருக்கும்  நன்றி கூறி  எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top