பா.ஜ.க., 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: தலைவர் அண்ணாமலை மற்றும் மூன்று முன்னாள் மாநிலத் தலைவர்கள்  களத்தில் !

பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை (மார்ச் 21) வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தென்சென்னையில் முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும் நீலகிரியில் மத்திய இணை அமைச்சரும், முன்னாள் தலைவருமான டாக்டர் எல்.முருகன் மற்றும் கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும்  ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி யில்கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நேற்று மாலை முடிந்தது.

இன்று மாலை பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

கோவை: தலைவர்  K.அண்ணாமலை

தென் சென்னை: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

கன்னியாகுமரி: முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன்

நீலகிரி: (தனி) மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன்

திருநெல்வேலி: மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்

கிருஷ்ணகிரி: சி.நரசிம்மன்

மத்திய சென்னை: வினோஜ் பி.செல்வம் மாநில செயலாளர்

வேலூர்: ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)

பெரம்பலூர்: டி.ஆர்.பாரிவேந்தர் (இந்திய ஜனநாயகக் கட்சி)

மேற்கண்ட 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடுவார்கள் என்பது தொகுதி மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top