பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிக வலுவான கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதன்படி பாமக, அமமுக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் உள்ளது.
இதில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக அவர்களின் சின்னங்களில் போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில் மற்ற கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.
அதன்படி வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் புதிய நீதிக் கட்சி, பெரம்பலூர் இந்திய ஜனநாயக கட்சி, சிவகங்கை இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தென்காசி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது.
மேலும் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.