மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நேற்று அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் 82 வயதாகும் டி.ஆர். பாலு நேற்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி எடுக்க வேண்டும். உறுதிமொழி வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் டி.ஆர். பாலு உறுதிமொழி எங்கிருக்கிறது என்பதையே தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்தவர் உறுதிமொழி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினர். மேலும், தேர்தல் அதிகாரி உதவியாளரை அழைத்து உறுதிமொழி இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு சைகை காட்டினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட டி.ஆர்.பாலு உறுதிமொழி தட்டுத்தடுமாறி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கருணாநிதி காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் டி.ஆர்.பாலு உறுதிமொழியை கூட வாசிக்க திணறியுள்ளாரே என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
இதுதான் தமிழ்நாட்டில் திமுக தமிழ் வளர்த்த லட்சணமா? என்ற கேள்வியும் தற்போது எழுகிறது. எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொடுக்காமல் தடுத்துவிட்டு, தமிழ் மொழியில் உறுதி மொழி எடுப்பதற்கே அடுத்தவர்களின் உதவிதான் திமுகவினருக்கு தேவைப்படுகிறது என்ற உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.