87ஆயிரம் கோடி கடன்: திராவிட மாடலுக்கு முதலிடம்

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது இதை தொடர்ந்து மஹாராஷ்டிரா, மேற்குவங்காளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. என ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளன. இதில் மஹாராஷ்டிரா தவிர இதர மூன்றும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் என்பது குறிப்பிடதக்கது. மத்திய அரசு மாநிலங்கள் கடன் பெறுவதை […]

87ஆயிரம் கோடி கடன்: திராவிட மாடலுக்கு முதலிடம் Read More »

பொய் சொல்லாதீர்கள் அமைச்சரே; பால்வளத்துறை அமைச்சரை கண்டித்த தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் விதிகளை மீறி சிறுவர்களை பணிக்கு அமர்த்தியதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதனை அத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மறுத்து வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மனோ தங்கராஜ் பொய்யுரைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக

பொய் சொல்லாதீர்கள் அமைச்சரே; பால்வளத்துறை அமைச்சரை கண்டித்த தலைவர் அண்ணாமலை Read More »

நெல்லுக்கு ஆதரவு விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கரீப் பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 143 ரூபாய் வீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 07.06.2023 அன்று நடந்தது. இதில், 2023-2024 ஆம் ஆண்டில் வேளாண் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பாண்டுக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு

நெல்லுக்கு ஆதரவு விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More »

வேலூர் ஆவின் பண்ணையில் ஆண்டிற்கு 9 லட்சம் லிட்டர் பால் திருட்டு

வேலூர் ஆவின் பண்ணையில், ஒரே பதிவெண் உடைய இரு வேன்கள் இயக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு, 2,500 லிட்டர் வீதம், ஆண்டிற்கு 9 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வேலுார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பண்ணையில், விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு, 1.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் பாக்கெட்டுகள், 600 முகவர்களுக்கு, 20 ஒப்பந்த வாகனங்களில் அனுப்பப்பட்டு, வினியோகம் நடக்கிறது. வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும், தினசரி, 76 ஆயிரம்

வேலூர் ஆவின் பண்ணையில் ஆண்டிற்கு 9 லட்சம் லிட்டர் பால் திருட்டு Read More »

போடியில் 1000 டன் சேமிப்புக் கிடங்கு – மத்திய அரசு திட்டம்

பாரதம் அகிலத்தின் உணவுக் களஞ்சியமாக உயர்ந்தோங்கி வருகிறது.  அகிலத்தின் குருவாக உச்சம் பெறும் பாரதம் பல்வேறு நாடுகளுக்கும் அன்னபூரணியாக விளங்குகிறது என்றால் மிகையன்று. பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷாவும் தானியங்கள் நல்ல முறையில் சேமிக்கப்பட வேண்டும். செம்மையாக வினியோகிக்கப்பட வேண்டும், தானியம் வீணடிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். போதிய

போடியில் 1000 டன் சேமிப்புக் கிடங்கு – மத்திய அரசு திட்டம் Read More »

கோயில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிக்கக் கூடாது, கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது

தமிழ்நாட்டில் உள்ள புராதன, பாரம்பரிய சின்னங்கள், சிலைகள் மற்றும் கோவில்களின் பாதுகாப்பு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரணைக்கு எடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பித்தது. அதில், தமிழ்நாடு அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் 75 கட்டளைகளை பிறப்பித்து இருந்தது நீதிமன்றம்.

கோயில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிக்கக் கூடாது, கோயில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது Read More »

பிபிசி ரூ.40 கோடி வரி ஏய்ப்பு : வாய்திறக்காத எதிர்க் கட்சிகள்

தாங்கள் வருமான வரித் துறை கணக்கு தாக்கல் செய்த போது, ரூபாய் 40 கோடியை வருமான வரித்துறை கணக்கில் இருந்து குறைத்து காட்டியுள்ளோம் என பிபிசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இங்கிலாந்தின் பிரபல பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்னும் பிபிசி ஒலிபரப்பு நிறுவனம்  சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக 2 பகுதிகளாக ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் குஜராத் கலவரம் பற்றி அன்றைய மோடி அரசை

பிபிசி ரூ.40 கோடி வரி ஏய்ப்பு : வாய்திறக்காத எதிர்க் கட்சிகள் Read More »

நாத்திகம் பேசி ஏமாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை : கடைசி வரை பாஜக தான் – கங்கை அமரன் 

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கங்கை அமரன் ’நாத்திகம் பேசி ஏமாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை, என்றும் கடைசி வரையில் பாஜக தான் இருப்போம் என்றும்’ சமீபத்தில் பிரபல தமிழ பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ”கலைஞர் எம்.ஜி.ஆர். இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள் தான் எங்க குடும்பமும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தது தான் ஆனால், அந்தக் கட்சியில் நாங்கள் உறுப்பினர்களாக இருந்ததில்லை.  அந்தக் கொள்கையை ஏற்றுக்  கொண்டதும்  இல்லை. கடவுளை நம்புவன் முட்டாள், காட்டுமிராண்டி, அயோக்கியன் என்று சொன்ன பெரியாரின் சிலைக்கு இரண்டு கட்சிகளும் மாலை மரியாதை செய்கிறார்களே? அப்படி என்றால் இரு கட்சிகளுமே மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம்? பிறகு எப்படி கடவுளுக்கு எதிராகப் பேசவில்லை. அவர்கள் என்று சொல்ல முடியும்? எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.  மக்களின் சென்டிமெண்ட்களை இறைநம்பிக்கையை மதிக்கும் கட்சி.  பாஜக அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். பெரியாரை பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை.  அவரின் கொள்கைகளையும் அதைப் பின்பற்றுபவர்களையும் பிடிக்கவில்லை என்றுதான் சொல்கிறேன்.  திமுகவைச் சேர்ந்தவர்கள் இன்றும் ரகசியமாக கோயிலுக்குச் சென்று தங்கள் குடும்பம் செழிக்க வழிபாடு செய்கிறார்கள். நீங்கள் நன்றாக இருக்க என்ன வழியைப் பின்பற்றுகிறீர்களோ, அதையே மற்றவர்களுக்கும் சொல்வது தானே நியாயம்? ஆனால் அதை மறைத்துவிட்டு நாத்திகம் பேசும் ஏமாற்றுத்தனம் எனக்கு பிடிக்கவில்லை. உங்கள் மனைவி உங்களுக்குப் பிடிக்காததைச் செய்யும் போது அதைக் கண்டிக்காமல் இருந்தால் உணர்ச்சியற்ற நபராகவே கருத முடியும்.  ஒருவர் தவறு செய்யும் பட்சத்தில் அது மனைவியாக இருந்தாலும், தவறு என்று சுட்டிக்காட்டுபவர்கள் தான் மனிதன். பிறந்ததிலிருந்து நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் இருந்தது இல்லை.  பாஜகவில் இணைந்த பிறகு எங்களுக்கான உரிய மரியாதையை அக்கட்சி கொடுத்துவருகிறது.  இப்போதுகூட என் அண்ணன் இளையராஜவிடம் பேசிவிட்டுதான் வருகிறேன். பிரதமர் மோடி மிகவும் அன்புடன் பேசியதைப் பற்றி அவரும் சொல்லிக் கொண்டிருந்தார்.  பாஜக மட்டுமே இந்து மத நம்பிக்கைகளை மதிக்கும் கட்சியாக இருக்கிறது.  அதனால் இந்த வாழ்க்கையில் கடைசிவரை பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் கங்கை அமரன் சேரப்போவது இல்லை”. என கட் அண்ட் ரேட்டாக

நாத்திகம் பேசி ஏமாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை : கடைசி வரை பாஜக தான் – கங்கை அமரன்  Read More »

திரெளபதி அம்மன் கோயிலுக்கு ‘சீல்’ : திராவிட மாடல் அரசு

மேல்பாதி கிராமத்தில் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டதாக கூறப்படும் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவர்களை அனுமதிக்கவில்லை எனக்கூறி கோயிலுக்கு சீல் வைத்துள்ளது திராவிடமாடல் அரசு. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின் போது பட்டியலினத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்ததாக கூறப்படுகிறது. கோயிலுக்குள் சென்ற பட்டியலினத்தவர்களை சிலர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் பட்டியலினத்தவரை அனுமதிக்க மறுதரப்பினர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டும், பிரச்னை தீர்ந்ததாக

திரெளபதி அம்மன் கோயிலுக்கு ‘சீல்’ : திராவிட மாடல் அரசு Read More »

திறனற்ற ஆட்சியை மறைக்க திமுக பொய் வழக்கு : திராவிட மாடல் சாதனை

சமூக வலைதளத்தில் கள்ளசாராயம் காய்ச்சிய திமுகவினர் 5 பேர் கைது என தகவல் பரப்பியதாக பொய் வழக்கின் கீழ் பாஜக ஆதரவாளரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்து இன்று பிணையில் விடுதலை செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளியில் சாராயம் காய்ச்சிய திமுகவினர் என போட்டோஷாப் செய்து, சமூக வலைதளத்தில்

திறனற்ற ஆட்சியை மறைக்க திமுக பொய் வழக்கு : திராவிட மாடல் சாதனை Read More »

Scroll to Top