திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மிக கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய பா.ஜ.க. சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பின் தீவிரத்தை முழுமையாக ஆய்வு செய்து மாநிலத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திட பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவானது உடனடியாக ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான குழுவில்
1) டாக்டர் சசிகலா புஷ்பா, மாநில துணை தலைவர்
2) பொன்.பாலகணபதி, மாநில பொது செயலாளர்
3) கே.நீலமுரளி யாதவ், மாவட்ட பார்வையாளர், திருநெல்வேலி தெற்கு
4) ஏ.என்.ராஜகண்ணன், மாவட்ட பார்வையாளர், திருநெல்வேலி வடக்கு
5) ஆர்.சித்ராங்கதன், மாவட்டத் தலைவர் தூத்துக்குடி தெற்கு
6) வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்டத் தலைவர், தூத்துக்குடி வக்கு
7) தமிழ்ச் செல்வன், மாவட்டத் தலைவர் திருநெல்வேலி தெற்கு
8) தயாசங்கர், மாவட்டத் தலைவர் திருநெல்வேலி வடக்கு
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.