பெங்களூருவில் ஹனுமன் சாலிசா ஒலிக்க செய்து கேட்டுக்கொண்டிருந்த கடை உரிமையாளரை, ஜிகாதிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்காக நீதி கேட்டு சென்ற பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோரை காங்கிரஸ் அரசு கைது செய்துள்ளது.
பெங்களூருவில் உள்ள நகரத்பேட்டையில் முகேஷ் குமார் 40, என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 17-ம் தேதி மாலை இவரது கடையில் ஹனுமன் சாலிசா பாடலை ஒலிக்க செய்து கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஜிகாதிகள் 5 பேர் அந்த வழியாக சென்றனர். தற்போது ரம்ஜான் நடக்கிறது ஏன் ஹனுமன் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறார். மசூதிக்கு செல்பவர்கள் இதை கேட்டுக்கொண்டு செல்ல முடியுமா என்றுகூறி ஜிகாதிக் கூட்டம், கடை உரிமையாளரை கடுமையாக தாக்கினர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து முகேஷ் குமார் ஹல்சூர் கேட் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் ஜிகாதிகள் சுலைமான் (28), ஷானவாஸ் (29), உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மூன்று பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இதை கண்டித்து, பல்வேறு ஹிந்து அமைப்பினர் முகேஷ் கடை முன்பு கூடினர். அங்கிருந்து ஹனுமன் சாலிசா பாடல் பாடியவாறு, ஊர்வலமாக சென்றனர். மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தாலாஜே, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க.,. – எம்.பி., தேஜஸ்வி சூர்யா உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அவர்களை தடுத்த போலீசார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் ஷோபா, எம்.பி., தேஜஸ்வி சூர்யா உட்பட ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி சூர்யா:
இந்து ஒருவர் தன் கடையில் ஹனுமன் பஜனை பாடல்களை ஒலிபரப்பியதற்காக தாக்கப்பட்டுள்ளார். மசூதியில் தொழுகைக்கு தொந்தரவு செய்யக்கூடாது என கூறி அவரை ஜிகாதிகள் தாக்கியுள்ளனர். காங்கிரஸின் ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
கடந்த சில நாட்களுக்கு கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பினர். அவர்களுக்கு இப்போது காங்கிரஸ் அரசு ஜாமீன் வழங்கியுள்ளது. முஸ்லிம்களுக்கு ஆதரவான ஆட்சியால் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.