திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா: பக்தர்கள் பரவசம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில் பக்தர்கள் அரோகரா பக்தி முழக்கத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 5.40 மணி அளவில் துலா லக்கனத்தில்அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. […]